உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் கொத்தப்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த ஊராட்சி தலைவராக செல்வராணி உள்ளார். மொத்தம் உள்ள ஆறு உறுப்பினர்களில் 4 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்து விட்டனர். மீதம் 2 பேர் மட்டுமே இருந்தனர். இந்நிலையில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜெகதீஸ் சந்திரபோஸ், தீபலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மறைமுக தேர்தலில் உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. கோரம் இல்லாததால் ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை