| ADDED : ஜூன் 14, 2024 05:41 AM
தேனி: மாவட்டத்தில் கடந்த ஆறரை மாதங்களில் 1371 கிலோ குட்கா பறிமுதல் செய்து 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, தேனி எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஞ்சா விற்பனை தடுப்பிற்காக எஸ்.ஐ., கதிரேசன் தலைமையிலும், குட்கா விற்பனை தடுப்பிற்காக எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையிலும் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி முதல் ஜூன் 12 வரை 1371 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் 202 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 8 டூவீலர்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. 180 வழக்குகள் பதிவு செய்து வழக்குகளில் தொடர்புடைய 192 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் உதவியுடன் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. கடை உரிமையாளர்களுக்கு ரூ.33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் கஞ்சா, குட்கா பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். , என்றார்.