மேலும் செய்திகள்
எள் விளைச்சலும், விலையும் திருப்தி
07-Sep-2024
தேனி: மாவட்டத்தில் சிஓ., 55 என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இந்த ரகம் முதற்கட்டமாக 180 எக்டேரில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் அதிக நெல் சாகுபடி செய்யும் மாவட்டங்களில் தேனியும் ஒன்றாகும். கம்பம் பள்ளதாக்கு, முல்லைப்பெரியாறு பாசன பகுதிகளில் அதிக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டிற்கு 13ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடியாகிறது. தற்போது வேளாண் துறை சார்பில் சிஓ.,52, ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., நெல் ரகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்தாண்டு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு கோவை வேளாண் கல்லுாரி சார்பில் அறிமுகப்படுத்தி உள்ள சிஓ., 55 நெல் ரகம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 180 எக்டேரில் இந்த புதிய ரகத்தை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 9 டன் விதை நெல்கள் மாவட்டத்திற்கு வந்துள்ளன.இந்த விதை நெல்கள் இம்மாத இறுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. வேளாண் துறையினர் கூறுகையில், சிஓ.,55 ரகம் சாகுபடி செய்தால் எக்டேருக்கு 7 டன் வரை நெல் மகசூல் பெறலாம். பிற ரகங்களில் 6டன் மகசூல் கிடைக்கும். மற்ற ரகங்களை ஒப்பிடுகையில் அறுவடை காலம் மிக குறைவு. அதாவது 115 நாட்களில் அறுவடை செய்ய இயலும் என்றனர்
07-Sep-2024