மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
போலீஸ் செய்திகள்.....
03-Oct-2025
நாளை( அக்.,4) மின்தடை
03-Oct-2025
ரத்ததான முகாம்
03-Oct-2025
விதிமீறிய 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
02-Oct-2025
தேனி : மாவட்டத்தில் 'சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன்' திட்டத்தில் ரூ.30கோடிக்கான கட்டமைப்பு வசதிகள் நிறைவடைய உள்ளது. இதனால் தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட 1500 பெண்கள் சுயதொழில் முனைவோராக உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில் ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினரை தொழில் முனைவோராக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி 2015ல் 'சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன்' திட்டம் செயல்படுத்த தமிழகத்தில் 11 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 2018-2019ல் தேனி மாவட்டமும் தேர்வானது. இதில் தேனி ஒன்றியத்தில் ரூ.30 கோடி மதிப்பில் தொழிற்சாலைகள், இயந்திரங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன.இத் திட்டம் மூலம் தேனி ஒன்றியத்தில் உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, காட்டுநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர், பெண்கள் தொழில் முனைவோராக மேம்படுத்த 31 வகையான தொழில்கள் துவங்க தொழிற்கூடங்கள் தயாராகி உள்ளது. இங்கு குடிநீர், இணைய வசதி, இ-சேவை மையம், திட, கழிவு மேலாண்மை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் மூலம் பசுமை குடில், நிழற் கூடங்களில் வேளாண் பயிர்சாகுபடி, பட்டு வளர்ப்பு, குளிர்பதன கோடவுன்கள், வேளாண் விளைபொருட்களை பாதுகாக்க பயன்படும் கோடவுன்கள், பேக்கரி, சிறுதானியங்கள், காய்கறிகளை மதிப்பு கூட்டு பொருட்கள், ஜூஸ் தயாரித்தல், வாழைநாரில் கைவினை பொருட்கள் தயாரித்தல், நாட்டுக்கோழி பண்ணை, நெல் அரவை ஆலை, மண்புழு உரம் தயாரித்தல், தேன் பிரித்து எடுத்தல், சோலார் உலர்த்தி, செயற்கை நகைகள் தயாரித்தல் போன்ற தொழிற்கூட அலகுகள் அமைய உள்ளது.இத் திட்டத்திற்காக மகளிர் திட்டம், வேளாண் துறை உள்ளிட்ட பிற அரசு துறைகள் சார்பில் 1500 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். 7 ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் குழுவினருக்கு தொழில் துவங்க வங்கி கடன் வசதி மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. இதனால் பெண்கள் சுயதொழில் முனைவோராக மாற வாய்ப்பு உள்ளது. தொழில் துவங்கினால் குடும்ப பொருளாதாரம் மேம்படும். இத்திட்டம் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
02-Oct-2025