உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இணை இயக்குனர் தகவல்

38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இணை இயக்குனர் தகவல்

தேனி : கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மாவட்டத்தில் ஜூன் 10ல் துவங்கப்பட்ட கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் மூலம் நேற்று வரை 38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன.கோமாரி நோய் கலப்பின மாடுகளை அதிகளவில் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம், உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.மாவட்டத்தில் உள்ள 1,01,800 கால் நடைகளை இந் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டதில் ஜூன் 10 முதல் 30 வரை 21 நாட்கள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. முகாமில் நேற்று வரை 38,960 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 62,840 கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஜூன் 30க்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு பெறும். அதன் பின் புதிய மாடுகள், தடுப்பூசி செலுத்தாத கால்நடைகளுக்கான கால அவகாசம் வழங்கப்படும் என, கால்நடைத்துறை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் கோயில்ராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை