உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் மாதிரிகள் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்புவதில் தாமதம்

குடிநீர் மாதிரிகள் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்புவதில் தாமதம்

பெரியகுளம், பெரியகுளம் ஒன்றியத்தில் 17 ஊராட்சியில் குடிநீர் மாதிரிகள் சேகரித்து திருநெல்வேலி பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உள்ளாட்சிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் நீர்நிலைகளில் குடிநீர் ஆதாரம் குறைந்து வருகிறது.பெரியகுளம் ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குடிநீர் மாதிரிகள் சேகரித்து வைகை அணையில் உள்ள குடிநீர் வாரிய ஆய்வகத்திற்கு வழங்கி பரிசோதிக்கப்படும்.இதில் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா, குடிக்க உகந்ததா என ஆய்வு செய்வார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர்கள் ஊராட்சியில் குடிநீர் மாதிரிகள் சேகரித்து திருநெல்வேலியில் உள்ள பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். கடந்த மாதம் துவக்கத்தில் இதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் காரணமாக ஒன்றிய குடிநீர் பராமரிப்பு மேற்பார்வையாளர்கள் இந்தப் பணியினை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கோடை காலத்தில் குடிநீரின் தரம் அறிவதில் சிக்கல் எழுந்துள்ளது. சுத்தமான குடிநீர் விநியோகிக்க பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை