உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: பயிற்சி மையத்தில் 8ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தையல் தொழிற்பிரிவுக்கும், 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், மொபைல் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ், ஏ.சி., மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் சேர்ந்து தொழில் பயிற்சி பெறலாம். பயிற்சிக்கான கட்டணம் இல்லை. தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவிகளுக்கு அரசு உதவித்தொகையுடன் பல்வேறு நலத்திட்டங்கள் சலுகைகளும் உள்ளன. பயிற்சி மையத்தில் நேரடி சேர்க்கைக்கான தேதி ஜூலை 31 ல் முடிவதாக இருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 16 வரை சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை