உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

தேனி; தமிழகத்தில் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் 2022ல் துவங்கப்பட்டது.இந்த வாரியம் மூலம் கணவர் இல்லாத, கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நலவாரியத்தில் கிராம,நகர்புறத்தில் வாழும் ஆதரவற்ற பெண்கள்www.tnwidowwelfareboard.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம்.இந்த இணையதளம் மூலம் ஒய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுயதொழில் மானியம் போன்ற உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி