உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பட்டியலில் பெயர் இல்லை: வி.ஏ.ஓ.,மீது தாக்கு

பட்டியலில் பெயர் இல்லை: வி.ஏ.ஓ.,மீது தாக்கு

தேனி: தேனி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. சீலையம்பட்டி, கோட்டூர், சின்னமனுார், உப்புக்கோட்டை, கம்பம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சில வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தது. இதனால் அவர்கள் விரக்தி அடைந்தனர். சிலர் ஒன்றாக கூடி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.எதிர்ப்பு தெரிவித்த இடங்களில் வி.ஏ.ஓ., வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு ஓட்டளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஓட்டுச்சாவடி பட்டியலில் பெயர் இல்லை என கூறி கோகிலாபுரம் வி.ஏ.ஓ., பிரபுவை தாக்கிய மாடசாமி என்பவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை