உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரகன்றுகள் நடவு

மரகன்றுகள் நடவு

தேனி, : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்திட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சி.இ.ஓ., இந்திராணி தலைமையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர்கள் உடனிருந்தனர். கல்வித்துறையினர் கூறுகையில், பள்ளி துவங்கிய பின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களுக்கு போட்டிகள், ஊர்வலம் ஆகிய நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ