உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ‛பெஸ்ட் பேபியாக தேர்வான பெண் குழந்தைக்கு பரிசு

‛பெஸ்ட் பேபியாக தேர்வான பெண் குழந்தைக்கு பரிசு

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவில், 115 நாட்கள் தாய்ப்பால் குடித்து உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமாக உள்ள பெண் குழந்தை 'பெஸ்ட் பேபி'யாக தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.இம்மருத்துவக் கல்லுாரியில் குழந்தைகள் நலத்துறை, இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா 7 நாட்கள் கொண்டாட்டப்பட்டது. நிறைவு விழாவிற்கு மருத்துவமனை நிலைய அலுவலர் சிவக்குமரன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் டாக்டர் செல்வக்குமார், சங்க செயலாளர் டாக்டர் ரகுபதி, பொருளாளர் முத்துப்பாண்டி, மகப்பேறியியல் துறை தலைமை டாக்டர்கள் நந்தினி, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர்.விழாவில் காந்திகிராம பல்கலை குடும்பநலத்துறை பயிற்சி மைய முதல்வர் டாக்டர் சத்யா மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். அரசு மருத்துவக் கல்லுாரி மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் 115 நாட்களுக்கு முன் பிறந்த ஆண்டிபட்டி கதிர்நரசிங்கபுரம் முத்துப்பாண்டி - அம்பிகா தம்பதியின் பெண் குழந்தை ஆரோக்கியமான குழந்தை (பெஸ்ட் பேபி) என தேர்வு செய்து குழந்தையின் தாய்க்கு பரிசு வழங்கினர்.தாய் அம்பிகாவின் பெண் குழந்தை பிறந்த போது 2 கிலோ 390 கிராம் எடை இருந்தது.தாய்ப்பால் தொடர்ந்து 115 நாட்கள் வழங்கியதால் உடல் எடை அதிகரித்து தற்போது 4 கிலோ 880 கிராம் எடையுடன் 'பெஸ்ட் பேபி'யாக தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ