உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி : தேனி எம்.ஜி.ஆர்., நகர் ஜவகர்லால் தெரு கலாவதி 59. தையல் தொழிலாளி. இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.மகன், மகள் திருமணம் முடித்து வெளியூரில் வசிக்கின்றனர். கலாவதி வெளியூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு ஜூலை 14ல் இரவு 10:00 மணிக்கு வீட்டிற்கு வந்து இரும்புக் கேட்டை பூட்டிவிட்டு, முன்கதவை பூட்டாமல் துாங்கிவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்து ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி என ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, பணம் திருடப்பட்டு இருந்தது. கலாவதி புகாரில், எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை