உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தங்க தமிழ்செல்வன் எம்.பி.,க்கு தேசிய செட்டியார்கள் பேரவை வரவேற்பு

தங்க தமிழ்செல்வன் எம்.பி.,க்கு தேசிய செட்டியார்கள் பேரவை வரவேற்பு

கம்பம், : தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்க தமிழ்செல்வனுக்கு, தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் வரவேற்று வாழ்த்து கூறினார்கள். அதன் நிறுவன தலைவர் பி. எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்தினார். அவருடன் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், மாநில தீர்மான குழு செயலாளர் ஜெயக்குமார், போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், செட்டியார்கள் பேரவை - தேனி மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, பெரியகுளம் முன்னாள் நகர் செயலாளர் செல்லப் பாண்டி, அயலக அணி செயலாளர் ராஜன், மற்றும் பேரவை நிர்வாகிகள், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ