உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இ.பைலிங் முறை நிறுத்திட ஏப்.,19 வரை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு பணிகள் முடங்கும் அபாயம்

இ.பைலிங் முறை நிறுத்திட ஏப்.,19 வரை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு பணிகள் முடங்கும் அபாயம்

தேனி : தமிழ்நாடு,- புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று (ஏப்., 8 )முதல் ஏப் 19 வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் செல்வகுமார் தெரிவித்தார்.வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணைக்கான அனுமதி கோரி, நீதிமன்றங்களில் ஆன்லைன் இ.பைலிங் தொழில் நுட்பத்தில் விண்ணப்பிப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நடைமுறை கீழமை நீதிமன்றங்களிலும் அமலுக்கு வந்தன. இந்த உத்தரவு அமலானது முதல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ள இ.பைலிங் முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. விண்ணப்பங்கள் தொழில்நுட்ப காரணங்களால் கால தாமதம் ஆகின. இதனால் வழக்கறிஞர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இ.பைலிங் முறையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி இன்று (ஏப்., 8) முதல் ஏப்., 19 வரை நீதிமன்றங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் செல்வக்குமார் கூறியதாவது: மதுரையில் நடந்த பொதுக்குழு தீர்மானத்தின் படி,'புதிய நடைமுறையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ள காலதாமதம் ஆவதாலும், இப் பணிகளை நீதிமன்ற பணியாளர்களே செய்து, வழக்கு விசாரணை எண் வழங்க வேண்டும் எனவும், பழைய நேரடி விண்ணப்பித்தல் முறைக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, தேனி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் ஏப்., 19 வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம். இதனால் நீதித்துறை பணிகள் முடங்கும் அபாயம் ஏற்படும்.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை