உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில்களில் திருட்டு

கோயில்களில் திருட்டு

தேனி : ஓடைப்பட்டி அப்பிபட்டி பஸ்ஸ்டாப் அருகில், மந்தையம்மன் கோயில் உள்ளது.இக்கோயிலில் புகுந்த திருடர்கள், 3 அடி உயரம் உள்ள கோபுர கலசம், குத்து விளக்குகளை திருடிச்சென்றனர். கோயில் நிர்வாகி முருகன் புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் பள்ளிகொண்டான் கோயில் உள்ளது. இங்கு மராமத்து பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், கோயிலுக்குள் புகுந்த ஆண்டிபட்டி மணிக்காரன்பட்டியை சேர்ந்த வோளாங்கண்ணி(25), குத்துவிளக்குகள் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற போது பிடிபட்டார். கம்பம் தெற்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ