| ADDED : ஆக 05, 2024 07:30 AM
தேனி : மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்த அரசுப்பள்ளி பிளஸ் 1 மாணவர்களுக்கான முதல்வர் திறனறித் தேர்வில் 1283 மாணவர்கள் பங்கேற்றனர். 188 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மட்டும் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் 9, 10ம் வகுப்புகளில் உள்ள பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் என கல்வியாண்டிற்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 1471 மாணவர்கள் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர்.ஆண்டிபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளத்தில் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி., மேல்நிலைப்பள்ளி, கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்களில் தேர்வுகள் நடந்தன. தேர்வில் 1283 மாணவர்கள் பங்கேற்றனர். 188 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.