உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன் இல்லாத சமுதாய சமையலறை நகராட்சி நிதி ரூ.30 லட்சம் வீண்

பயன் இல்லாத சமுதாய சமையலறை நகராட்சி நிதி ரூ.30 லட்சம் வீண்

சின்னமனூர்: சின்னமனூரில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கென ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய சமையலறை கூடம் பயனற்ற நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.சின்னமனூர் நகராட்சியில் வண்டிப்பேட்டையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் சமுதாய சமையலறை கட்டடம்கட்டப்பட்டது. தமிழக முதல்வரின் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கென இந்த சமையலறை கட்டப்பட்டது.கட்டப்பட்ட சமுதாய சமையலறை ஓராண்டாக பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். .ஜன்னல்கள், கதவுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.சமையல் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால், சமையலறை பயன்பாடு இன்றிஉள்ளது.இதனால் நகராட்சியின் வரிப்பணம் ரூ.30 லட்சம் வீணாகியுள்ளது. இக் கட்டடத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ