உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலை சோதனை சாவடியில் வனத்துறையினரை தாக்கிய 4 பேர் கைது

மேகமலை சோதனை சாவடியில் வனத்துறையினரை தாக்கிய 4 பேர் கைது

சின்னமனூர், : இரவில் மேகமலை பகுதிக்கு செல்ல தடுப்பு கம்புகளை எடுக்க கோரி சோதனை சாவடியில் வனத்துறை ஊழியர்களை தாக்கிய நால்வர்கைது செய்யப்பட்டனர். மூவர் தப்பி ஓடினர். மேகமலை புலிகள் காப்பகமாக மாறியதால் மாலை 5:00 மணிக்கு மேல் வாகன போக்குவரத்து, பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதற்கென தென்பழநியில் வனத்துறை சோதனை சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் 7 பேர் காரில் சென்றுள்ளனர். சோதனை சாவடி பணியில் வனக்காப்பாளர் காசி 55, வெண்ணியாறுயை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் சரண்குமார் 27, பணியில் இருந்தனர். காரில் வந்தவர்களில் தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் 38, 'தான் பத்திரிகை நிருபர் என்றும், செக்போஸ்ட் தடுப்பு கம்புகளை திறந்து விடுங்கள். மேகமலைக்கு செல்ல வேண்டும்' எனகூறி உள்ளனர். 'மாலை 5 மணிக்கு மேல் மேகமலை செல்ல அனுமதி இல்லை', என பணியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, பணியில் இருந்த வனத்துறையினரை 7 பேர் கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த வனக்காப்பாளர் காசி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரண்குமார் லேசான காயம் என்பதால் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.சம்பவம் குறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், எஸ்.பி. சிவபிரசாத்திடம் கூறியுள்ளார். எஸ்.பி. உத்தரவில் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் தலைமையிலான குழுவினர், முத்துதேவன்பட்டி சதீஷ் குமார் 38, சிவா 40, செல்வம் 37, பாலார்பட்டி மலைச்சாமி 42 ஆகியோரை கைது செய்தனர். இச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவர் தப்பியோடினர். ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ