| ADDED : ஜூலை 22, 2024 07:30 AM
போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 44 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்களின் சங்கம விழா நேற்று நடந்தது.இப்பள்ளியில் 1978 -- 80ல் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளின் சங்கம விழா நடந்தது. பள்ளித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் ராமசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி, உதவி தலைமை ஆசிரியர்கள் ஒண்டிவீரன், ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முன்னாள் ஐ.ஜி., பிரபாகரன் வரவேற்றார்.முன்னாள் மாணவர்கள் 176 பேர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு முன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்கள் முத்துசெட்டி, மகாராஜ், சிவராமன், ராஜேந்திரன், கண்ணன் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர், ஹரிஹரன், மனோகரன், பாலசுப்ரமணி. ரவீந்திரன், ராகவன், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். படிக்க முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.