தேனி : தேனி மாவட்ட போலீஸ் துறையில் 57 ஏட்டுக்கள் 10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு அளித்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., அபினவ்குமார் வழிகாட்டுதலில், தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.1999 மே 24ல் போலீஸ் பணியில் சேர்ந்து, 2014ல் ஏட்டுக்களாக பதவி உயர்வு பெற்று, கடந்த மே 31ல் பத்து ஆண்டுகள் பணி முடித்த 57 ஏட்டுக்களுக்கு சிறப்பு எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதில் பிரபாகர், பி.முருகன், இளங்கோவன், மணி, கோட்டைகருப்பையா, பாரதி, ஈஸ்வரன், ஆறுமுகம், காமுத்துரை, கதிர்வேல், வெங்கடேசன், முருகதாஸ், காட்டுராஜா, ரமேஷ்குமார், செல்வம், தங்கம், பழனிகுமார், பிரபு, சுருளிராஜன், கோபிராஜா, ராஜ்குமார், ஈஸ்வரன், எபினேஷர்விஜய்அமிர்தராய், எஸ்.வெங்கடேஷ், கணேசன், சிவக்குமார், முத்துக்குமார், முத்தையா, பி.கணேசன், ராம்குமார், ராமகிருஷ்ணன், ரமேஷ்கண்ணன், கோபால், சசிகுமார், சென்றாயபெருமாள், மகேஸ்வரன், மாரிசாமி, முத்து, உதயசூரியன், நவநீதகிருஷ்ணன், சரவணன், சந்தானகுமார், அருள், ராஜேஷ்கண்ணா, செல்லதுரை, சக்திவேல், ரமேஷ், சந்திரபாண்டியன், காண்டீபன், கோவிந்தராஜன், கணேசன், முருகன், ஜெயக்குமார், பாண்டியன் (எ) கண்ணன், மாரிமுத்து, மகேஸ்வரன், ஜெகநாதன் 57 பேர் பதவி உயர்வு பெற்றனர். இவர்களை எஸ்.பி., பாராட்டினார்.