உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 6 பவுன் தங்க நகை திருட்டு

6 பவுன் தங்க நகை திருட்டு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே நெடுஞ்சாலை துறை அலுவலர் சிவன் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு ரூ.3.20 லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது.பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவன் 44. சென்னை நெடுஞ்சாலைத்துறையில் அலுவலராக பணி செய்து வருகிறார். ஜூலை 13ல் குடும்பத்துடன் சென்னையில் இருந்து பெரியகுளம் வந்து தனது வீட்டில் ஜூலை 17 வரை தங்கிவிட்டு, அன்றைய தினம் பக்கத்து தெருவில் உள்ள தனது தாயாரிடம் சாவியை கொடுத்து விட்டு சென்னை திரும்பினார். இரு தினங்களுக்கு முன் சிவா என்பவர் சிவனுக்கு அலைபேசியில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிவன் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க காப்பு, தலா ஒரு பவுன் இரு மோதிரம் என ரூ 3 லட்சம் மதிப்பிலான தங்க பொருட்கள், ரூ. 20 ஆயிரத்துக்கும் மதிப்பிலான 50 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை