உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும்

கம்பம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும்

கம்பம், : கம்பம் அரசு மருத்து வகையில் தீக்காய சிகிச்சை பிரிவை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.கம்பம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் ஒரளவிற்கு செல்படுகிறது. இது தவிர ஆண், பெண் தங்கி சிகிச்சை பெறும் பகுதி, டயாலிசிஸ் யூனிட், எக்ஸ்ரே, ஆய்வகம், தீவிர சிகிச்சை பிரிவு , விஷ முறிவு பிரிவு, மருந்தகம், வெளிநோயாளிகள் பிரிவு என அனைத்திலும் சேவை குறைபாடுகள் அதிகம் நிறைய உள்ளன.தீக்குளிப்பு, தீ விபத்துகளில் சிக்குபவர்கள் சிகிச்சைக்கு வந்தால், உடனே தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பே எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து இந்த மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. இந்த பிரிவிற்கு தேவையான ஏசி இயந்திரம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் தீக்காய சிசிச்சை பிரிவு கட்டடத்தை, ஊசி போடும் அறையாக மாற்றினர். இதனால் தீக்காய சிகிச்சை பிரிவு மூடப்பட்டுவிட்டது.மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்த போது, தீக்காய சிகிச்சை பிரிவிற்கென தனியாக பணி நியமனங்கள் இல்லை. அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. 30 சதவீதத்திற்குள் பாதிப்பு என்றால் வார்டில் வைத்து சிகிச்சையளிக்கப்படும். அதற்கு மேல் என்றால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகிறோம் என்கின்றனர்.இணை இயக்குநர் அவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் மீண்டும் தீக்காய சிகிச்சை பிரிவை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ