உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பறக்கும் படையில் இட நெருக்கடி இறக்கி விடப்படும் கேமராமேன்

பறக்கும் படையில் இட நெருக்கடி இறக்கி விடப்படும் கேமராமேன்

ஆண்டிபட்டி, : லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையில் வருவாய்த்துறை அலுவலர் தலைமையில் வாகன டிரைவருடன் ஒரு எஸ்.ஐ., ஒரு பெண் போலீஸ், கேமராமேன், மற்றும் 2 துணை ராணுவத்தினர் இருந்தனர். தற்போது கூடுதலாக இரு துணை ராணுவத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பறக்கும் படை வாகனத்தில் ஒன்பது பேர் பயணிக்கும் நிலை உள்ளது. வாகனத்தில் 9 பேருக்கு இருக்கை வசதி இல்லாததால், கேமராமேன், துணை ராணுவத்தினர் இருவரை வாகனத்தில் இறக்கி விட்டு தேவைப்படும் இடத்திற்கு பஸ் மற்றும் தனியார் வாகனத்தில் வந்துசேர அறிவுறுத்தப்படுகின்றனர். சம்பவ இடத்திற்கு கேமராமேன் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை இல்லை என்று பறக்கும் படையில் உள்ளவர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை