| ADDED : ஆக 18, 2024 07:08 AM
கம்பம், : கம்பம் அரசு பெண்கள் மேல்நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ். எல்.சி., படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1977 ல் எஸ்.எஸ்.எல். சி. படித்த 50 க்கும் - மேற்பட்ட மாணவிகள் மதுரை, கோவை, திருச்சி , பாலக்காடு, தேனி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் திருமணம் முடித்து பேரன் பேத்திகள் எடுத்திருந்தனர். பலர் அரசு பணிகளிலும், பலர் தொழில் முனைவராகவும் , இல்லத்தரசியாகவும் உள்ளனர். மாணவிகள் சந்திப்பின் போது பள்ளி நாட்களில் நடந்த சுவையான சம்பவங்களை நினைவு பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியை மணியம்மமையை கவுரவப்படுத்தினர். அடிக்கடி சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும், ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைவரும் பங்கேற்கவும் முடிவு செய்தனர் . பள்ளிக்கு சென்று, தாங்கள் படித்த வகுப்பைகளை பார்த்து மகிழ்ந்தனர். ஏற்பாடுளை கம்பம் அமுதா, தனலட்சுமி செய்திருந்தனர்.