உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரண்டு ஆண்டுகளாக வராத மண் பரிசோதனை வாகனம்

இரண்டு ஆண்டுகளாக வராத மண் பரிசோதனை வாகனம்

கம்பம்: தேனி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நடமாடும் மண் பரிசோதனை வாகனம் இரு ஆண்டுகளாகியும் வரவில்லை.மண்ணில் என்ன சத்துக்கள் உள்ளது, எது தேவை, எது குறைவாக என்பதை அறிய மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரம்,பூச்சி மருந்து பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மண் பரிசோதனை செய்ய நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் ஒன்று தேனி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதனை சின்னமனுாரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவானவும் தெரிவித்து இருந்தார். ஆனால் இதுவரை நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் வரவில்லை.மண் பரிசோதனை நடமாடும் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை