உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுலாத்தலமாகுமா சுரங்கனாறு நீர்வீழ்ச்சி

சுற்றுலாத்தலமாகுமா சுரங்கனாறு நீர்வீழ்ச்சி

கூடலுார்: கூடலுார் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் விழும் சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு குளுமையாக காட்சி தந்து வருவதால் அப்பகுதியை சுற்றுலாத்தலமாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.கூடலுார் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது சுரங்கனாறு நீர்வீழ்ச்சி. கேரளாவில் மழை பெய்யும் நேரங்களில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும். நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி அடர்ந்த தமிழக வனப் பகுதிக்கு நடுவில் உள்ளதால் இங்கு சென்று குளிக்கும் வசதியில்லை. கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் ரோட்டில் நின்று பார்த்தால் நீர்வீழ்ச்சி கண்ணுக்குக் குளுமையாகவும் சுற்றிலும் பச்சை பசேல் என்றும் காட்சியளிக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ரோட்டோரத்தில் நின்று இதனைக் கண்டு ரசித்த வண்ணம் செல்கின்றனர்.

சுற்றுலாத் தலமாகுமா

வனப்பகுதிக்குள் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் அருகில் சென்று பார்க்கவோ குளிக்கவோ முடியாது. நீர்வீழ்ச்சியிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும். இதனை சுற்றுலாத்தலமாக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்வார்கள். நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் உள்ள கூத்த பெருமாள் கோயில் வரை தார் ரோடு வசதி உள்ளது. தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு சுற்றுலாத்தலம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
ஆக 03, 2024 07:33

அங்கேயும் தோண்டி, வீடு, ரிசார்ட்டெல்லாம்.கட்டுங்க. சீக்கிரம் நிலச்சரிவு ஏற்பட் வழி பண்ணுங்க.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி