உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் சாகச பயணம்; தமிழக சுற்றுலா பயணிகள் சிக்கினர்

தேசிய நெடுஞ்சாலையில் சாகச பயணம்; தமிழக சுற்றுலா பயணிகள் சிக்கினர்

மூணாறு : கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஜீப்பில் சாகச பயணம் செய்த தமிழக சுற்றுலா பயணிகள் சிக்கினர்.கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு இருவழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்ட பிறகு வாகன விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே தரமான முறையில் அமைக்கப்பட்ட ரோட்டின் அழகு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து விடுவதால் தன்னை மறந்து சாகச பயணம் செய்கின்றனர். இச்செயல்கள் நாளுக்கு, நாள் அதிகரிப்பதால் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சாகச பயணம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.சிக்கினர்: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கானல் பகுதியில் தமிழக பதிவு எண் கொண்ட ஜீப்பில் சுற்றுலா பயணி ஒருவர் சாகச பயணம் செய்தார். மோட்டார் வாகன துறையினர் ஜீப்பை மடக்கியபோது, அதில் நான்கு பேர் இருந்தனர். ஜீப் உரிமையாளரை நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ரத்து: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு பகுதியில் ஜூலை 2ல் தெலுங்கானா மாநில பதிவு எண் கொண்ட காரில் சுற்றுலா பயணிகள் சாகச பயணம் செய்தனர். அந்த காரை ஓட்டிய கர்நாடகாவைச் சேர்ந்த டிரைவர் அகிலேஷின் ஓட்டுனர் உரிமத்தை இடுக்கி மோட்டார் வாகன துறை அதிகாரி ராஜீவ் ஆறு மாதத்திற்கு ரத்து செய்ததுடன் ரூ.3750 அபராதம் விதித்தார். கடந்த ஒரு மாதத்தில் ஆறு பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் சாகச பயணத்தை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை போர்டுகளை வைக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என மோட்டார் வாகன துறை அதிகாரி ராஜீவ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை