உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மலைப்பாதையில் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுதல்

மலைப்பாதையில் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுதல்

கூடலுார் : பலத்த காற்று, மழை காரணமாக குமுளி மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. தமிழக கேரள எல்லையான 6 கி.மீ., தூர குமுளி மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளை கொண்டதாகும்.பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயமும், மரம் சாய்ந்து விழும் நிலையிலும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் டூவீலரில் சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.இரவு நேரங்களில் குமுளி மலைப் பாதையில் டூ வீலரில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், காரில் செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை