உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டு எண்ணிக்கை மையங்களை விட்டு முகவர்கள் வெளியே செல்லக்கூடாது தி.மு.க., செயற்குழுவில் ஆலோசனை

ஓட்டு எண்ணிக்கை மையங்களை விட்டு முகவர்கள் வெளியே செல்லக்கூடாது தி.மு.க., செயற்குழுவில் ஆலோசனை

தேனி : ஓட்டு எண்ணிக்கை மையங்களை விட்டு தி.மு.க., முகவர்கள் வெளியே செல்லக்கூடாது.' தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.தேனி தனியார் ஹோட்டலில் தி.மு.க., வடக்கு, தெற்கு மாவட்டங்களின் சார்பில், ஓட்டு எண்ணிக்கை செல்லும் முகவர்களுக்கான ஆலோசனை, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர்கள் செல்லப்பாண்டியன், மனோகரன் தலைமை வகித்தனர். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன், தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார், பங்கேற்றனர்.மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், 'ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்லும் தி.மு.க., முகவர்கள் எக்காரணத்தை கொண்டும் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியே வரக்கூடாது. விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஓட்டுச்சீட்டுகள் கிழிக்கப்பட வில்லை என்பதையும் உறுதி செய்வது அவசியம்.' என்றார். வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில், ஜூன் 1ல் முகவர்களுக்கான 'ஜூம்' மீட்டிங் கலந்தாய்வு கூட்டம் நடக்க உள்ளது.அதில் ஆலோசனை வழங்கப்பட உள்ளதால் முகவர்கள் பங்கேற்பது அவசியம்.', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ