உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆந்திரா கஞ்சா 10 கிலோ பறிமுதல்

ஆந்திரா கஞ்சா 10 கிலோ பறிமுதல்

போடி, : தேவாரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் 44., இவர் நேற்று தேவாரம் மெயின் ரோட்டில் டூவீலரில் வந்துள்ளார். அப்போது போடி டி.எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் இஸ்திரிஸ்கான், கதிரேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக டூவீலரில் செந்தில் கொண்டு சென்றது வந்தது தெரிந்தது. தேவாரம் போலீசார் செந்திலை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா, டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ