உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி 18வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த வார்டில் என்.ஜி.ஓ., நகர், அம்மன் நகர் பகுதிகளில் அதிக குடியிருப்புகள் உள்ளன. ரோடு, குடிநீர் வசதி, தெருக்களில் இடையூறான மின் கம்பங்களை மாற்றி அமைத்தல், சுடுகாடு எரியூட்டு கொட்டகை அமைக்க வலியுறுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் பல மாதங்களாக முன் வைத்துள்ளனர். இதுவரை நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து நேற்று இப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி