உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வறட்சியால் இடம் பெயரும் விலங்குகள்

வறட்சியால் இடம் பெயரும் விலங்குகள்

கம்பம்:மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், சிறுத்தை, மான்கள், காட்டு மாடுகள், பன்றிகள் என பலவகை விலங்குகள் உள்ளன. மழை பெய்து ஒரு மாதமாகி விட்டது. கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.வனப்பகுதிகளில் குடிக்க தண்ணீரின்றி தேனிமாவட்டம் மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, வண்ணாத்திப் பாறை, யானை கெஜம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள், மான்கள், காட்டுமாடுகள் தாகம் தீர்க்க கேரள மாநிலம் தேக்கடி ஏரியை நோக்கி செல்ல துவங்கி உள்ளன. வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் தேக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி