| ADDED : ஜூலை 03, 2024 05:37 AM
போடி : போடி சுப்புராஜ் நகர் விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாததால் இரவில் மது அருந்தும் பாராகவும் சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக மாறி உள்ளன.போடி சுப்புராஜ் நகரில் நகராட்சி விளையாட்டு மைதானம் அமைந்து உள்ளது. தினமும் காலை, மாலையில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், முதியோர் நடை பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மைதானத்தை சுற்றி சுற்றுபுற சுவர், கேட் வசதி இருந்தும் இரவில் பூட்டை உடைத்தும், கேட் ஏறி குதித்தும் கஞ்சா, மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். குடித்த பின் பாட்டில்களை அதே இடத்தில் உடைத்து செல்கின்றனர். நடை பயிற்சிக்கு வருவோரின் கால்கள் காயப்படுகின்றன. இதனால் உடற்பயிற்சிக்கு மக்கள் இங்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இதுபற்றி நகராட்சி, போலீசாரிடம் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. உடற்பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதோடு, குடி பிரியர்களிடம் இருந்து விளையாட்டு மைதானத்தை பாதுகாத்திட நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.