உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

ஆண்டிபட்டி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

ஆண்டிபட்டி, : 'ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் முதலாம்ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட பொது கலந்தாய்வு இன்று (ஜூன் 10ல்) காலை 9:00 மணிக்கு நடக்க உள்ளது.' என, கல்லுாரிமுதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது: இன்று பி.எஸ்சி., கணிதம் இயற்பியல் பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் கலந்து கொள்ளலாம். ஜூன் 12ல் பி.ஏ., வணிகவியல் - கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தொழில் சார்ந்த பாடப்பிரிவு படித்த விண்ணப்பதாரர்கள் அனைவரும், கல்வி பாடப்பிரிவு படித்தவர்களில் கட் ஆப் 289 வரை எடுத்தவர்கள் கலந்து கொள்ளலாம்.ஜூன் 14ல் பி.ஏ., பொருளாதார பாட பிரிவுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களில் தொழில் சார்ந்த பாடப்பிரிவு படித்த விண்ணப்பதாரர்கள், பொருளாதாரம் படிக்காமல் வேறு பாடப் பிரிவுகளில் படித்து விண்ணப்பித்தவர்கள், பொருளாதாரம் படித்து விண்ணப்பித்தவர்களில் கட் ஆப் 207 வரை எடுத்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்., இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ