உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

தேனி : இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://agnipathvayu.cdac.inஎன்ற இணைதளம் மூலம் ஜூலை 28 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2விற்கு இணையான கல்வி தகுதி உடைய, திருமணமாகதா 2004 ஜூலை 7 முதல் 2008 ஜன., 3க்குள் பிறந்த ஆண்கள், பெண்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு அக்., 18ல் நடக்க உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணபித்தோர் தேர்வு தொடர்பான விபரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ