உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு கலை கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு கலை கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி : வீரபாண்டி அரசு கலை கல்லுாரியில் பயில்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி முதல்வர் உமாதேவி தெரிவித்துள்ளார்.இக் கல்லுாரியில் கலைப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், இளநிலை பொருளியல், இளம்அறிவியல் பிரிவில் கம்யூட்டர் சயின்ஸ், கணிதம், பி.சி.ஏ., பாடப்பிரிவுகள், முதுநிலை பிரிவில் ஆங்கிலம், வணிகவியல், முதுநிலை அறிவியல் பிரிவில் கம்யூட்டர் சயின்ஸ் பாட பிரிவுகள் உள்ளன.மாணவர்கள் சேர்க்கைக்காக கடந்த மாதம் கலந்தாய்வு நடந்தது.இதில் விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tngasa.inஎன்ற முகவரியில் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூலை 8ல் கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும் போது பிளஸ் 2 டி.சி., நகல், மதிப்பெண் சான்றிதழ், ஆதார், புகைப்படம், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு04546 294429 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்