உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்விக்கான பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான (இருபாலர்) மாணவர் சேர்க்கை நடக்கிறது.இப்படிப்பில் சேரும் மாணவ மாணவிகள் https://scert.tnschools.gov.inஎன்ற இணையத்திற்கு சென்று ஜூன் 30 மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.500, மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 92451 77492 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை