தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச் செயலாளர் நவீன்ராம், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் பேசினர்.ஜோஹோ, எம் அண்டு எக்ஸ், ஆரா எனர்ஜி, வின்டோரிக்ஸ், ரி ஹாமி சொலியூசன்ஸ், ஐஜேஎல், நியோலிங்க், பரோமாதா ரீபர் பிரைவேட் லிமிடெட், டேட்டா பேட்டர்ன்ஸ், டெல்பி, டி.வி.எஸ்., டபிள்யூ ஜி டெக் சொலியூசன்ஸ், மெர்குரி பில்டர்ஸ், இசட் எப் கமர்சியல வெகிக்கள் போன்ற நிறுவனங்களில் தேர்வான 102 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.விழாவில் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி துணை முதல்வர்கள் சத்யா, மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.