உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழக கவர்னரிடம் கல்விச்சேவை விருது பெற்றவருக்கு பாராட்டு விழா

தமிழக கவர்னரிடம் கல்விச்சேவை விருது பெற்றவருக்கு பாராட்டு விழா

தேனி, : தமிழக கவர்னர் ரவியிடம் சிறந்த கல்விச்சேவைக்கான விருது பெற்ற தேனி நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜ்மோகன் அவர்களுக்கு அரிமா நண்பர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை பொருளாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், இணைச் செயலாளர் விபுகுமுார், ஏ.எம்.ஆர்.ஆர்., குழும இயக்குனர் சந்திரகுமார், கே.எம்.சி., இயக்குனர் முத்து கோவிந்தன், நட்டாத்தி நாடார் உறவின் முறை செயலாளர் கமலக்கண்ணன், அரிமா சங்க நிர்வாகிகள் சன்னாசி, பாண்டியராஜ், கண்ணன், ஜெகதீஸ், செல்வநாயகம் வாழ்த்தினர். அரிமா சங்க உறுப்பினர்கள், நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவினை தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ராஜன், ராஜேந்திராபைப்ஸ் கணேஷ், ஜெரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குலோத்துங்கன், மாஸ்டர் சேப்டி முத்து செந்தில்குமார், பொறியாளர் ராதாகிருஷ்ணன், ஆனந்தம் சில்க்ஸ் நடராஜன் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ