உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கவனிப்பு இல்லாததால் ஓட்டுப்பதிவில் மந்தம் அரசியல் கட்சியினருடன் வாக்குவாதம்

கவனிப்பு இல்லாததால் ஓட்டுப்பதிவில் மந்தம் அரசியல் கட்சியினருடன் வாக்குவாதம்

கம்பம்: 'கவனிப்பு' இல்லாததால் ஒட்டுப் பதிவு மந்த நிலையில் இருந்தது. வீடுகளுக்கு சென்று அழைத்த அரசியல் கட்சி நிர்வாசிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.தேனி லோக்சபா தொகுதியில் மூன்று கட்சி வேட்பாளர்களுமே கடும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இறுதியில் ஓட்டுக்கு கவனிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஆளும்தரப்பில் மட்டும் மூன்று இலக்கத்தில் கவனித்தனர். அதுவும் 50 சதவீதம் மட்டுமே நடந்ததால் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வரை எப்படியும் கவனிப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களை ஏமாற்றி விட்டனர். இதனால் நேற்று காலையில் ஒட்டுப் பதிவு மந்தமாக இருந்தது. கிராமங்களில் தோட்ட வேலைகளுக்கு மக்கள் சென்று விட்டனர். நகர் பகுதிகளில் ஒட்டளிக்க வருமாறு அழைக்க சென்ற அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் பல பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இப்ப மட்டும் எங்களை தெரிகிறதா, நேற்று வரை ஞாபகம் இல்லையா என்று வாக்குவாதம் செய்தனர். அது மட்டுமல்லாமல் கடும் வெப்பம் நிலவியதும் ஒட்டுப் பதிவு மந்த நிலைக்கு காரணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை