உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரள அரசு பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

கேரள அரசு பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

மூணாறு : மூணாறில் கேரள அரசு பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்த அன்புசுரேஷ் 50, கேரள அரசு பஸ் மூணாறு டிப்போவில் டிரைவராக உள்ளார். இவர் ஓட்டிய பஸ்சை ஜூன்30 இரவில் பழைய மூணாறில் ஆட்டோவை வைத்து வழி மறித்த சிவன்மலை எஸ்டேட் பழைய மூணாறு டிவிஷனைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுபாஷ் 23, பஸ் டிரைவர் அன்புசுரேஷை வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்து பலமாக தாக்கினார். அதில் அன்பு சுரேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். மூணாறு எஸ்.ஐ., ஜிதேஷ் கே. ஜான் தலைமையில் போலீசார் சுபாஷை கைது செய்தனர்.ஆட்டோவுக்கு வழி விடாமல் பஸ்சை இயக்கியதால் ஆத்திரத்தில் டிரைவரை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை