உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு

கம்பம்: கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சவுந்தரராசன் தலைமை வகித்தார். தாளாளர் கவிதா முன்னிலை வகித்தார். முதல்வர் கயல்விழி வரவேற்றார். குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அன்புச்செழியன் பேசியதாவது :சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் புதுப்புது நோய்கள் ஏற்படுகிறது. மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளியில் இருந்து வீட்டிற்குள் செல்லும் போது கை கால்களை சுத்தம் செய்வது, சாப்பிடும் முன் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வது, பாத்ரூம் சென்று வந்த பின் கைகளை சுத்தம் செய்வது, பயன்படுத்தும் பாத்ரூம்களை கிருமி நாசினிகள் கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்வது. வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் முதுநிலை முதல்வர் சுவாதிகா , தென் பிராந்திய கப்பல் படை இணை ஆணையர் ( தணிக்கை ) ராம் ஜெயந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை