உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

தேனி : மாவட்டத்தில் வனத்துறை சார்பில் 100 பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ல் விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்தை வலியுறுத்தி அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விழப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 100 மாணவர்கள் தேர்வு செய்து அவர்களை ஜூன் 13 காலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுருளி அருவி வனப்பகுதியில் அழைத்து சென்று நேரடி களப்பயிற்சியும் மதியத்திற்கு பிறகு வைகை அணை அருகே உள்ள வனவியல் கல்லுாரியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி