உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாட்ஸ்ஆப்பில் அவதுாறு பரப்பியவர் மீது வழக்கு

வாட்ஸ்ஆப்பில் அவதுாறு பரப்பியவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி பாத்திமா நகரை சேர்ந்தவர் வீரமணி மனைவி தீபா 32. இவர் கெங்குவார்பட்டி ராமர்கோயில் தெருவை சேர்ந்த பைனான்சியர் குமாரிடம் 35, ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் பணம் வட்டிக்கு வாங்கி திருப்பி செலுத்தி விட்டார். இந்நிலையில் குமார் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த இளையராஜா மனைவி பாண்டியம்மாளுக்கு பணம் வட்டிக்கு கொடுத்துள்ளார். குமார், பாண்டியம்மாள் தன்னுடன் தொடர்பில் உள்ளதாக வாட்ஸ் ஆப்பில் பேசி அவதூறு பரப்பியுள்ளார். இதனால் பாண்டியம்மாள் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன், குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்