உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறில் மூவர் மீது வழக்கு

தகராறில் மூவர் மீது வழக்கு

போடி: போடி சுப்புராஜ் நகர் புதுக் காலனியில் வசிப்பவர் பிரபு 34. இவர் வீட்டின் முன்வளர்ந்து இருந்த மரக் கிளைகளை வெட்டியுள்ளார். இதனால் அருகே வசிக்கும் ஆறுமுகம் 43,' எங்களை கேட்காமல் எப்படி வெட்டலாம்' என தரக்குறைவாக பேசியுள்ளார்.இவரது மனைவி பாண்டியம்மாள் 35. கம்பால் பிரபுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பிரபு போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரக்கிளை வெட்டியது சம்பந்தமாக பிரபுவை, ஆறுமுகம் தட்டி கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு ஆறுமுகத்தை கம்பால் அடித்து காயம் ஏற்படுத்தி, மனைவிவ பாண்டியம்மாளை தகாத வார்த்தையால் பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இருதரப்பு புகாரில் போடி டவுன் போலீசார் பிரபு, ஆறுமுகம், பாண்டியம்மாள் மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ