உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஆண்டிபட்டி : ஏத்தக்கோயில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சின்னன் 55, இவரது முதல் மனைவி மாரியம்மாள் 51, இவர்களுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.இது தொடர்பாக ஜீவனாம்சம் கேட்டு மாரியம்மாள் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.சின்னன் மறுமணம் செய்து சின்னத்துரை, சிவா என்ற இரு மகன்கள் உள்ளனர். சின்னன் தனக்கு கொடுத்திருந்த இடத்தை அவ்வப்போது சென்று பார்ப்பதை மாரியம்மாள் வழக்கமாக கொண்டிருந்தார். இரு நாட்களுக்கு முன் இடத்தை பார்க்க சென்ற போது சின்னன் அவரது இரு மகன்களும் மாரியம்மாளை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.மாரியம்மாள் புகாரில் தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி