உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சக்கை கொம்பன்

தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சக்கை கொம்பன்

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகானல் எஸ்டேட் பகுதியில் நேற்று ரோட்டில் நடமாடிய சக்கை (பலாப்பழம்) கொம்பன் ஆண்காட்டு யானையை வனத்துறையினர் கடுமையாக போராடி காட்டிற்குள் விரட்டினர்.இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஆகிய ஊராட்சிகளில் சக்கை (பலாப்பழம்) கொம்பன் எனும் ஆண் காட்டு யானை மிகவும் ஆபத்தான நிலையில் நடமாடி வருகிறது. அந்த யானை நேற்று மதியம் 3:00 மணிக்கு கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய கானல் எஸ்டேட் பகுதியில் ரோட்டில் நடமாடியது.அப்பகுதியில் நடமாடிய அரிசி கொம்பனை போன்று சக்கை கொம்பனும் மிகவும் ஆபத்தானது என்பதால் யானையை பார்த்ததும் அந்த வழியில் வந்த வாகனங்கள் திரும்பிச் சென்றன. சின்னக்கானல் வனத்துறை சார்பிலான யானை தடுப்பு பிரிவினர் ஆறு பேர் கொண்ட குழு போராடி யானையை காட்டிற்குள் விரட்டினர். அதன்பிறகு அச்சம் இன்றி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ