உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சென்னை - போடி ரயில் ஓராண்டு நிறைவு விழா

சென்னை - போடி ரயில் ஓராண்டு நிறைவு விழா

ஆண்டிபட்டி : சென்னை - போடி இடையே அதிவிரைவு ரயில் இயக்கத்தின் ஓராண்டு நிறைவு விழா ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்க உப தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுபாஷ் சந்திர போஸ், அருணாச்சலம், பாண்டி, முருகேசன் மற்றும் ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போடியிலிருந்து சென்னை சென்ற ரயிலின் பைலட், கோ பைலட், மேலாளர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்