உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

தேனி: ஆண்டிபட்டி தாலுகா மந்திசுனை மூலக்கடை கிராமத்தை சேர்ந்த ஊர்த்தலைவர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், குமரன் தலைமையில் வந்த பொதுமக்கள் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களுடன் கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மனுவில், ''எங்கள் கிராமத்தில் உள்ள காலி இடத்தை நுாலகம், கால்நடை மருத்துவமனை அமைக்க ஆண்டிபட்டி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். கட்டுமானம் மேற்கொள்ள ஊராட்சிமன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்ற மறுத்துவிட்டார். இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்களக்கு ஆதரவாக செயல்படுகிறார். ஆக்கிரமிப்பை அகற்றி, நுாலகம், கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என கோரினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்