உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் கட்டணத்தில் கை வைத்து விஜிலன்சில் சிக்கிய கண்டக்டர்

பஸ் கட்டணத்தில் கை வைத்து விஜிலன்சில் சிக்கிய கண்டக்டர்

மூணாறு: பயணிகளிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்காமல் மோசடியில் ஈடுபட்ட கேரள அரசு பஸ் கண்டக்டர் இரண்டாம் முறையாக விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் சிக்கினார்.மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் ஆற்றுக்காடு டிவிஷனைச் சேர்ந்த ரமேஷ்கண்ணா 49, கேரள அரசு பஸ் மூணாறு டிப்போவில் கண்டக்டராக பணியாற்றினார். இவர் 2018ல் பயணிகளிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்காமல் மோசடி செய்தபோது அத்துறையின் விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் சிக்கினார். பின் ' சஸ்பெண்ட்' செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார்.அதே பாணியில் மீண்டும் ரமேஷ் கண்ணா மோசடியில் ஈடுபடுவதாக புகார் வந்தது.நேற்று முன்தினம் ரமேஷ்கண்ணா கண்டக்டராக சென்ற மூணாறு, தேனி வழித்தடத்தில் இயக்கிய பஸ்சை பூப்பாறையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக விஜிலன்ஸ் அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் நான்கு பயணிகளிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்தது. அவரை தொடர்ந்து பணி செய்ய அதிகாரிகள் மறுத்ததால் வேறு கண்டக்டர் வரவழைக்கப்பட்டு பஸ் இயக்கப்பட்டது. அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை